
அண்ணாமலை நவ., 23ல் சென்னை திரும்புகிறார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஆக்ஸ்போர்டு பல்கலையில் மூன்று மாத அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர்ந்து படிக்க, கட்சித் தலைமை அனுமதியுடன் ஆக., 27ல் லண்டன் சென்றார். நவ., 23ல் சென்னை திரும்புகிறார்.அடுத்த ஆண்டு பிப்ரவரியில், மீண்டும் அரசியல் புத்தாய்வு படிப்புக்கான சான்றிதழ் பெறச் செல்வார்.இதனிடையே, தமிழக பா.ஜ.,வில் பல மாவட்ட நிர்வாகிகளை அண்ணாமலை மாற்றியமைக்க உள்ளார்.