
சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய நிலையில் கோவையில் வேகம் எடுக்கும் ராணுவ தொழில் பூங்கா பணி
கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வாரப்பட்டி கிராமத்தில் 420 ஏக்கரில் ராணுவ விமானங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்து, இதற்கான மேம்பாட்டு பணிகளை தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) தொடங்கி செயல்படுத்தி வருகிறது. ராணுவ தளவாடங்கள் தொழில் பூங்கா அமைக்க இருப்பது கோவை தொழில் துறையினர் இடையே வரவேற்பு பெற்று உள்ளது. இதற்காக தனியாரிடமிருந்து சுமார் 350 ஏக்கர் நிலத்தை டிட்கோ ஆர்ஜிதம் செய்துள்ளது. இந்த நிலத்துடன் சேர்த்து மொத்தம்…