சந்திரயான் 5 திட்டத்துக்கு தேசிய விண்வெளி ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

டெல்லி: நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான முன்னோடி திட்டமான சந்திரயான் 5 திட்டத்துக்கு தேசிய விண்வெளி ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இந்தியா-ஜப்பான் இணைந்து திட்டத்தை தயாரிக்க உள்ளனர். சந்திரயான் -5 திட்டத்துக்கு நிலவு துருவ ஆய்வு திட்டம்(லூபெக்ஸ்) என்று பெயரிடப்பட்டு உள்ளது. ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் ரோவரையும், இஸ்ரோ லேண்டரையும் தயாரிக்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் -5 திட்டத்தில் அதிகசக்தி வாய்ந்த, அதிக எடை கொண்ட லேண்டரை, ரோவரை பயன்படுத்த உள்ளோம். நிலவில்…

Read More

நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய கர்பா பாடல்: 

நவராத்திரியை முன்னிட்டு, பிரதமர் மோடி ‘கர்பா ‘ பாடல் ஒன்றை எழுதி உள்ளார். கர்பா என்பது பாரம்பரியமான குஜராத் நடனமாகும். முக்கியமாக நவராத்திரி காலத்தில் இந்த நடனம் நடக்கும்.இது குறித்து அவர் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இது நவராத்திரியின் புனிதமான நாள். அன்னை துர்கா மீதான பக்தியால் ஒன்றுபட்டு பக்தர்கள் பல்வேறு வகைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அன்னையின் சக்தி மற்றும் கருணைக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘ஆவடிக்கலை’ என்ற தலைப்பில் கர்பா…

Read More

மெரினா கூட்ட நெரிசலில் 5 பேர் பலி: ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மெரினா விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களில், வெயில் தாங்க முடியாமல் 5 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனக்கூறியுள்ளார்.

Read More

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்டர் அம்ப்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. “மைக்ரோஆர்என்ஏவின் கண்டுபிடிப்பு மற்றும் பிந்தைய டிரான்ஸ்கிரிப்ஷனல் மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கு” கண்டுபிடித்ததற்காக 2 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் மருத்துவத்துக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது.

Read More

உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றி பெற்றது.

20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிரணி களமிறங்கியது.18.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி-20 தொடரில் தனது முதல் வெற்றிக் கணக்கை இந்திய மகளிரணி தொடங்கியுள்ளது.

Read More

கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தமிழ் இலக்கியம், கலை, கலாச்சாரம் என்று தமிழ் வளர்ச்சிக்கும், அடித்தட்டு மக்களின் எழுச்சிக்கும் ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்து தமிழர்தம் வாழ்வில் நீங்கா இடம் பெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நினைவைப் போற்றுவதற்காக அவர்தம் பெயரில் சென்னை, கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது.

Read More

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல் செய்தனர். பயங்கரவாத தடுப்புப் பிரிவு, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய சோதனையில் போதைப்பொருள் சிக்கியது. சமீபத்தில், போபாலில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சோதனை நடத்தி எம்.டி மற்றும் எம்.டி தயாரிக்கப் பயன்படுத்திய பொருட்களைக் கைப்பற்றினர். தொழிற்சாலைக்குள் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த 2 பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி: சென்னையில் போக்குவரத்து நெரிசல் – பொதுமக்கள் கடும் அவதி

சென்னையில் விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த பொதுமக்கள், நிகழ்ச்சி முடிந்ததும் நெரிசலில் சிக்கி கடும் அவதிக்கு ஆளாகினர். முறையான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படாததால் ரயில் நிலையங்களில் மக்கள் மணிக்கணக்கில் அலைமோதினர். வெயில், நெரிசலில் சிக்கி தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Read More

மெரினாவில் மக்கள் வெள்ளம்!

மெரினாவில் விமானப்படை சாகசம்; வானில் வர்ண ஜாலம் காண திரண்டது மக்கள் வெள்ளம்! சென்னை மெரினா கடற்கரையில், விமானப்படையினரின் வான் சாகச நிகழ்ச்சியை, 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர் இந்தியாவில் அதிகப்படியான பார்வையாளர்கள் கண்டு ரசித்த நிகழ்ச்சி என்ற புதிய சாதனையை சென்னை மெரினாவில் விமானப்படையினர் நடத்திய வான் சாகச நிகழ்ச்சி ஏற்படுத்தியது.

Read More