
போஸ் வெங்கட் இயக்கத்தில்-சார்
கன்னி மாடம் வெற்றியை தொடர்ந்து போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியாகும் சார் திரைப்படம் நாளை ஆடியோ லாஞ்ச் மற்றும் ட்ரைலர் வெளியீடு நடைப்பெற உள்ளது.
கன்னி மாடம் வெற்றியை தொடர்ந்து போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியாகும் சார் திரைப்படம் நாளை ஆடியோ லாஞ்ச் மற்றும் ட்ரைலர் வெளியீடு நடைப்பெற உள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் தனது சொந்த நிதி ரூ12. 50 கோடியில் புதிதாக கட்டி வரும் வளா் தமிழ் நூலகத்துக்கு திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி நன்கொடையாக அளித்துள்ள 1054 புத்தகங்களின் பட்டியலை பெரியாா் சுயமரியாதைப் பிரச்சார அறக்கட்டளை உறுப்பினா் காரைக்குடி சாமி. திராவிடமணி ப. சிதம்பரத்திடம் சனிக்கிழமை வழங்கினாா். அப்போது காரைக்குடி தொகுதி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி உடனிருந்தாா்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்த நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விஜய் கட்சியின் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளதாக விழுப்புரம் டிஎஸ்பி தகவல் தெரிவித்துள்ளார். மாநாடு நடக்கும் இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ளதால் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் நடத்த வேண்டும். குழந்தைகள், பெரியவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறை த.வெ.க மாநாட்டுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: ரூ.2000க்கு மேல் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18சதவீத ஜிஎஸ்டி விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூ.2,000க்கு மேல் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ள 54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஹர்விந்தர் சிங் பாராலிம்பிக்ஸில் இந்தியாவின் முதல் வில்வித்தை தங்கப் பதக்கத்தை வென்றவர், ப்ரீத்தி பெண்களுக்கான 100 மீட்டர் T35 போட்டியிலும், பெண்களுக்கான 200m T35 போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றவர். ஹர்விந்தர் சிங் மற்றும் ப்ரீத்தி பால் இருவரும் பாராலிம்பிக்ஸ் நிறைவு விழாவில் இந்தியாவின் கொடி ஏந்தி வருவார்கள். ஏழு தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் 13 வெண்கலம் உட்பட 29 பதக்கங்களுடன் இந்தியா பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸில் தனது வரலாற்றுப் பக்கத்தை நிறைவு செய்தது. ஒட்டுமொத்த…
தமிழகத்தில் முதல் முறையாக நாட்டு இன காளை மாடுகளுக்கான அழகுபோட்டி 14 நாட்டு இன காளை மாடுகள் பங்கேற்பு. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரம் செல்வ விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாட்டு இன காளை மாடுகளுக்கான அழகு போட்டி நடைபெற்றது இந்த அழகு போட்டியில் சிவகங்கை புதுக்கோட்டை ராமநாதபுரம் மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 14 நாட்டு இன காளை மாடுகள் பங்கேற்றன நாட்டுக்குட்டை, காங்கேயம், புலிக்குளம், தேனிமலைமாடு, புதுக்கோட்டை சிகப்பு, மட்டி…
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் இன்று(செப்.7) விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடந்தது.அதிகாலை முதல் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
2024 பாரா ஒலிம்பிக்-ஆடவர் ஷாட் புட் F57 போட்டியில் Hokato Hotozhe Sema வெண்கலம் வென்றார்.ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி64 இறுதிப் போட்டியில் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்றார்
பிள்ளையார்பட்டியில் நேற்று சதுர்த்தி விழாவை முன்னிட்டு 9ம் நாள் விழாவாக தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர்.
விநாயகர் சிலை கரைப்புக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ள நிலையில், அதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளனர்.