சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் 

பிரதமர் நரேந்திர மோதி நேற்று (ஆக. 31) மூன்று அதிவிரைவு வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கிவைத்தார். மீரட் – லக்னோ, சென்னை எழும்பூர் – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையேயான மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோதி காணொளி மூலம் டெல்லியிலிருந்து தொடங்கிவைத்தார்.தமிழகத்தில் ஓடும் வந்தே பாரத் பட்டியல் 1,சென்னை செண்ட்ரல்-மைசூரு 20607. 2,சென்னை செண்ட்ரல்-கோவை 20643. 3,சென்னை எழும்பூர்-திருனெல்வேலி 20665. 4,சென்னை செண்ட்ரல்-விஜயவாடா 20677. 5,கோவை-பெங்களூரு 20641. 6,சென்னை…

Read More

இன்று முதல் தமிழகத்தில் 25 டோல்கேட்டுகளில் கட்டண உயர்வு!

தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. செப்டம்பர் 1 ஆம்தேதி முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வரவுள்ளது.

Read More

ரூபினா பிரான்சிஸ்-வெண்கலம் வென்றார்

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024 3வது நாள்: பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்1 போட்டியில் ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றார்.இத்துடன் இந்தியா 5 மெடல்களை பெற்றுள்ளது.

Read More

சென்னையில் கார் ரேஸ்

சென்னையில் ஃபார்முலா-4 ரேசிங் ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் இன்று (ஆக.31) மற்றும் நாளை (செப்.1) இரவு நடைபெறுகிறது. இதற்காக தீவுத்திடலைச் சுற்றி 3.5 கி.மீ., தொலைவுக்கு பிரத்யேக பந்தய தனம் அமைக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் பகுதியில் 8000 ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகள், மின் விளக்குகள், இரும்பு தடுப்புகள் போன்ற அனைத்து ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இரவு 7.10 முதல் 8:45 மணி வரை பல்வேறு பிரிவுகளுக்கான தகுதிச் சுற்றுகள் நடைபெற உள்ளன.

Read More

இன்று மேலும் 2 பதக்கங்கள்

பாரிஸ், பாரா ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்கள் வென்றுள்ள நிலையில் மேலும் 2 பதக்கங்கள். ஆடவருக்கான 100மீ ஏர் பிஸ்டல் SH1 போட்டியில் வெள்ளிப் பதக்கத்துடன் இந்தியாவின் நான்காவது பதக்கத்தை மணீஷ் நர்வால் பதிவுசெய்தார் மேலும் போட்டி வரலாற்றில் பல தனிநபர் பதக்கங்களை வென்ற ஒரே ஆறாவது இந்தியர் ஆனார்.2024 பாராலிம்பிக்கில் பெண்களுக்கான டி35 100 மீட்டர் போட்டியில் பாரா தடகளப் போட்டியில் இந்தியாவின் முதல் வெண்கலப் பதக்கத்தை ப்ரீத்தி பால் வென்றார்.

Read More

பாரா ஒலிம்பிக்-தங்கம்,வெண்கலம் வென்ற இந்தியர்கள்

இந்திய வீராங்கனை அவனி லேகரா 249.7 புள்ளிகள்(ஓலிம்பிக் ரெகார்ட்) பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். தென் கொரியா வீராங்கனை லீ யுன்ரி 246.8 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் மற்றும் இந்திய வீராங்கனை மோனா அகர்வால் 228.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றனர்.

Read More

ஹெச்.ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு

அரசியல் குறித்து படிக்க 3 மாதங்களுக்கு லண்டன் சென்றுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த இடைப்பட்ட காலத்துக்கான பாஜக பொறுப்புத் தலைவராக இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.  இந்தநிலையில், கட்சி சார்ந்த பணிகளில் முடிவெடுக்க ஹெச்.ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என பாஜக தற்போது அறிவிப்பினை வெளியாகியிட்டுள்ளது.குழுவில், எச்.ராஜா ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த குழுவில் தமிழக பாஜக துணை தலைவர் சக்கரவர்த்தி, கனகசபாபதி, மாநில பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், பேராசிரியர் ராம சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்…

Read More

பாரா ஒலிம்பிக் ஷீத்தல் தேவி அசத்தல்

இந்திய வில்வித்தை வீராங்கனையான ஷீத்தல் தேவி உலக சாதனையை ஜஸ்ட் மிஸ்ஸில் தவறவிட்டுள்ளார். மகளிருக்கான வில்வித்தை போட்டியில் ரேங்கிங் சுற்றுகள் நடத்தப்பட்டன. இந்த ரேங்கிங் சுற்று மூலமாக அணிகள் பிரிக்கப்படும். இதில் 17 வயதாகும் இந்திய வீராங்கனையான ஷூத்தல் தேவி 703 புள்ளிகள் பெற்று அசத்தியுள்ளார்.704 தான் உலக சாதனை.

Read More

பாரா ஒலிம்பிக் 2024 பாரிஸ்

பாரிஸ் : மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் விளையாட்டு தொடர் ஆகஸ்ட் 28ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த தொடரில் சுமார் 4400 விளையாட்டு வீரர்கள் உலகம் முழுவதும் பங்கேற்கிறார்கள். இதில் இந்தியாவில் இருந்து 84 வீரர்கள் சுமார் 12 போட்டி பிரிவுகளில் விளையாடுகின்றனர்.கடந்த முறை இந்தியா 38 பேர் கொண்ட குழுவை அனுப்பி, அதில் 19 பதக்கங்களை வாங்கியது. இந்த நிலையில் இம்முறை இந்தியாவில் இருந்து 84 வீரர், வீராங்கனைகள் சென்றிருப்பதால் அதிக பதக்கம் இந்தியா…

Read More