மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் பிரதமரின் வித்யாலஷ்மி திட்டம்.

திறமைவாய்ந்த மாணவர்கள் தரமான உயர்கல்வி நிறுவனங்களில் பயிலுவதற்காக நிதியுதவியை வழங்கும். இந்த திட்டத்தின் மூலமாக கல்வி கட்டணம் மற்றும் கல்வி தொடர்பான பிற செலவுகளின் முழு தொகையையும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பிணையில்லாமல் கல்வி கடனாக பெற முடியும். தேசிய நிறுவன கட்டமைப்பு தரவரிசையில் முதல் 100 இடங்களில் இருக்கும் அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் 860 தகுதிவாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலுவதற்கு இந்த திட்டம் பொருந்தும். இதன் மூலமாக…

Read More

ஜி.எஸ்.டி.,யின் கீழ் பதிவு செய்யப்பட்ட போலி நிறுவனங்கள் 

நாடு முழுதும் போலி ஜி.எஸ்.டி., நிறுவனங்களை அடையாளம் காண்பதற்காக, கடந்தாண்டு மே 16ல் துவங்கி, ஜூலை 15 வரை நடைபெற்ற முதல் சிறப்பு விசாரணையில், ஜி.எஸ்.டி.,யின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்த 21,791 நிறுவனங்கள் வாயிலாக 24,010 கோடி ரூபாய் அளவிற்கு ஜி.எஸ்.டி., ஏய்ப்பு நடைபெற்றுள்ளதை கண்டறிந்தனர்.அதன் தொடர்ச்சியாக, 2024 ஆக., 16ம் தேதி முதல் அக்., 30 வரை, இரண்டாவது சிறப்பு விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.இரண்டா வது சிறப்பு விசாரணையில், ஜி.எஸ்.டி.,யின் கீழ் பதிவு செய்யப்பட்ட…

Read More

ரந்தம்பூர் தேசிய பூங்காவில் 25 புலிகள் காணவில்லை

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது ரந்தம்பூர் தேசிய பூங்கா. இங்குள்ள புலிகள் காப்பகத்தில் ஓராண்டில் கிட்டத்தட்ட 25 புலிகள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவரத்தை தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன்குமார் கூறி உள்ளார்.இந்த புலிகள் காப்பகத்தில் மட்டும் 75 புலிகள் உள்ளன. இதில் மூன்றில் ஒரு பங்கு புலிகள் மாயமாகி இருப்பது ராஜஸ்தான் மாநில மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைடுத்து, மாநில அரசு விசாரணை குழு ஒன்றை அமைத்து இருக்கிறது.

Read More

பாம்பன் புதிய பாலம் நவ. 20ல் பிரதமர் திறக்ககூடும்.

ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிதாக இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் கடந்த 5 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்தது. இந்த புதிய ரயில் பாலம், பணிகள் நிறைவு பெற்று உள்ளது. பல்வேறு கட்ட ஆய்வு பணிகள் முடிந்து உள்ள நிலையில், பிரதமர் மோடி நவம்பர் 20ம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாக 2 நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியானது, சிஆர்எஸ் ஆய்வுக்கு பின் பாலத்தில் ரயிலை இயக்க…

Read More

டொனால்டு டிரம்ப் முன்னிலை

ஓட்டு எண்ணிக்கை துவங்கிய 11 மாகாணங்களில் 54 சதவீத ஓட்டுகளுடன் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார். தேர்தலில் கமலா ஹாரிஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்

Read More

சூப்பர் ஆப்’ என்ற புதிய செயலியை  100 கோடி ரூபாய் செலவில் ரயில்வே நிர்வாகம் உருவாக்கி வருகிறது.

ரயில்வே துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது:ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., செயலி தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். தற்போது உருவாக்கப்படும் சூப்பர் செயலி, ஐ.ஆர்.சி.டி.சி., செயலியுடன் ஒருங்கிணைக்கப்படும். மேலும், ரயில்வே சேவைகளை வழங்கி வரும் பிற செயலிகளையும் இந்த சூப்பர் செயலியுடன் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பயணியர் இன்னும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் செயலி வடிவமைக்கப்பட உள்ளது.ரயில்வேக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தரும் ஒரு தொழில்நுட்ப வசதியாகத் தான் இந்த சூப்பர் செயலியை நாங்கள் கருதுகிறோம். இது, அடுத்த மாதம் இறுதியில்…

Read More

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நவ.,5ல் நடக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல், நான்காண்டுக்கு ஒரு முறை நடக்கிறது. இப்போது நடக்கும் தேர்தலில், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பிலும், முன்னாள் அதிபர் டிரம்ப் குடியரசு கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர்.அதிபர் தேர்தலில் போட்டியிடுவோர் நேரடியாக மக்களிடம் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தாலும், மக்கள் நேரடியாக அதிபரை தேர்வு செய்வதில்லை. ‘எலக்ட்ரோல் காலேஜ்’ முறை பின்பற்றப்படுகிறது. இந்த எலக்ட்ரோல் காலேஜ் மொத்த ஓட்டு எண்ணிக்கை 538 ஆகும். இதில், 270 பிரதிநிதிகளின் ஓட்டுக்களை பெறுபவர்,…

Read More

கோவையில் டைடல் பார்க்கை, முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

கோவை விளாங்குறிச்சியில் டைடல் பார்க்கை, முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். முன்னதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு செய்தார்.நாளை, 5ம் தேதி கோவை வரும் முதல்வர், விளாங்குறிச்சியில் எட்டு தளங்களுடன், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2.98 லட்சம் சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ள, எல்காட் டைடல் பார்க்கை திறந்து வைக்கிறார்.

Read More

ஆன்லைன் விற்பனை ரூ.1 லட்சம் கோடி

கடந்த வாரம் முடிவடைந்த ஒரு மாத கால பண்டிகை சீசனில், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடிக்கு பொருட்களை விற்பனை செய்துள்ளனர். இது கடந்தாண்டு விற்பனையை காட்டிலும் 23 சதவீதம் அதிகம்.ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடிக்கு பொருட்களை விற்பனை செய்திருந்தன.இது முந்தைய ஆண்டின் தீபாவளி பண்டிகை கால விற்பனையை காட்டிலும் 23 சதவீதம் அதிகம்.

Read More

வாயு கசிந்த பள்ளியில் மீண்டும் மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பெற்றோர்கள் அதிர்ச்சி

 சென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவில் விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது இங்கு கடந்த 25-ம் தேதி ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் இருந்த மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. சில மாணவிகள் மயங்கி விழுந்தனர். இதனால் சக மாணவிகள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக பாதிக்கப்பட்ட 45 மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து வாயுக்கசிவு ஏற்பட்ட அந்த பள்ளிக்கு…

Read More