சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவை இன்று முதல் இயக்கம்

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில், 14 மாதங்களுக்கு பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பறக்கும் மின்சார ரெயில் சேவை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இன்று முதல் இருமார்க்கமாகவும் 90 ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. சில பணிகள் முடிந்தபிறகு முழுமையானரெயில் சேவை தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

ஆன்லைன் மோசடி; மக்களே உஷாராக இருங்க; பிரதமர் மோடி எச்சரிக்கை

மன்கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது ஆன்லைன் மோசடியில் மக்கள் உஷாராக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தை சமாளிக்க மாநில அரசுகளுடன் புலனாய்வு அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. எந்த புலனாய்வு அமைப்பும், இது போன்ற விசாரணைக்காக உங்களை தொலைபேசியில் அழைக்காது. வீடியோ அழைப்பும் போலீசாரிடம் இருந்து வராது. டிஜிட்டல் அரெஸ்ட் என்று எதுவுமே கிடையாது. அப்படி யாரேனும் போனில் அழைத்தால் அது மோசடி என்று புரிந்து கொள்ள வேண்டும்.அத்தகைய சைபர் கிரைம் குற்றங்களை தெரிவிக்க…

Read More

நேரடி வரி வருவாய் மூலம் அதிக வருமானம் ஈட்டிய மாநிலங்கள்

நாடு முழுவதும் மாநிலங்களின் நேரடி வரி வருவாய் மற்றும் வருமான வரி வருவாய் குறித்து எஸ்.பி.ஐ., அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நேரடி வரி விதிப்பின் மூலம் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்டிரா 38.9 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, டில்லியைப் பின்னுக்குத் தள்ளி கர்நாடகா 2வது இடத்தை பிடித்துள்ளது.டில்லி 3வது இடத்திலும், தமிழகம் 4வது இடத்திலும், குஜராத் 5வது இடத்திலும் உள்ளது. ஒட்டுமொத்த நாட்டின் வரி வருவாயில் இந்த டாப் 5…

Read More

 நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் -விஜய்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கின. கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் விஜய் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். முன்னதாக, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். கொள்கை பரப்பு செயலாளர் தாகிரா, தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி மற்றும்…

Read More

இரு மொழிக்கொள்கை; சாதிவாரிக் கணக்கெடுப்பு; மாநில பட்டியலில் கல்வி: த.வெ.க., அறிவிப்பு -திராவிட சித்தாந்தம்

இரு மொழிக்கொள்கை; சாதிவாரிக் கணக்கெடுப்பு; மாநில பட்டியலில் கல்வி: த.வெ.க., அறிவிப்பு -திராவிட சித்தாந்தத்தை கையிலெடுத்து வேறு வழியில் பட்டியலிட்டது. ஊழலுக்கு எதிரான போரில் அரசியல் வாதிகளைக்காட்டிலும் அதிகார வர்க்கமே அதிகம் அதனை கட்டுப்படுத்துவது எப்படி?. சிறுபான்மியரின் நலன் பாதுகாக்க ஆதிக்க சாதியை எதிர்க்க சக்தி உள்ளதா? இருமொழிக்கொள்கை நடைமுறையில் இருக்கும்போது என்ன புதிதாக சொல்ல செய்ய வருகிறீர்கள்? .கவர்னர் பதவியை அகற்ற செயல்திட்டம் என்ன? இது போல எண்ணற்ற கேள்விகள் காப்பி அடிக்ககாமல் மாற்று வழியை…

Read More

கூட்டணி ஆட்சிக்கு தயார்! அறிவித்தார் விஜய் இது திருமாவளவனை குறிவைத்தா?

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்தால் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தரப்படும் என்று நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

Read More

பெரியாரின் கடவுள் மறுப்பு பற்றிய அறியாமையா? விஜய் பேச்சு…

பகுத்தறிவு புரட்சியாளர் தந்தை பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப் போவதே இல்லை. எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதே எங்களுடைய நிலைப்பாடு. பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனை உள்ளிட்ட பெரியார் சொன்ன இவை அனைத்தையும் நாங்கள் முன்னெடுக்கப் போகிறோம்.

Read More

ஈரான் மீது தாக்குதல்; துவங்கியது இஸ்ரேல் ராணுவம்!

ஈரானில் உள்ள ராணுவ நிலைகள் மீது துல்லியமான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் துவங்கி உள்ளது. இதனால் மேற்காசியாவில் பதற்றம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

Read More

பா.ஜ.க. எதிர்பார்ப்பதை சீமான் செய்கிறார்- திருமாவளவன்

கூட்டணி கட்சிகளுக்கு இடையில், பிரச்னையின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெறலாம்; ஆனால் விரிசல் ஏற்படாது என, முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து விட்டார். இதை, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வழிமொழிகிறது.திராவிடம் வேறு; தமிழர் வேறு என விவாதத்தை கூர்மைப்படுத்துவது சங் பரிவார் அமைப்புக்கு துணை போவதாக அமையும். தமிழக கவர்னர் ரவி, ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் இதைத்தான் விரும்புகின்றனர்.பா.ஜ., எதை எதிர்பார்க்கிறதோ, அதைத்தான் சீமான் செய்கிறார். சீமான் விவாதிப்பதெல்லாம் அப்படித்தான் இருக்கிறது. தி.மு.க., எதிர்ப்பு என்பது வேறு, திராவிட எதிர்ப்பு என்பது…

Read More

கனடா பிரதமரை பதவி விலக வலியுறுத்தும் அவை உறுப்பினர்கள்

கனடா பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் லிபரல் கட்சியின் 153 எம்.பிக்களில் 24 பேர் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் அக்டோபர் 28 ஆம் தேதிக்குள் ட்ரூடோ தனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டும் என எம்.பிக்கள் அவகாசம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 2025 அக்டோபருக்குள் நடக்கவுள்ள அடுத்த கூட்டாட்சித் தேர்தலில் ட்ரூடோவின் தலைமையின் கீழ் கட்சி பெரிய இழப்பை சந்திக்கலாம் என எம்.பிக்கள் அஞ்சுகின்றனர். மேலும், தற்போதைய கருத்துக்கணிப்புகளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு…

Read More