அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு பில்கேட்ஸ் ஆதரவு

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் களமிறங்கி உள்ளனர். கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு, அதிக செல்வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கமலாவுக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளார்.

Read More

 செபி தலைவர் மாதவி புரி புச் பொது கணக்கு குழு முன் இன்று (அக்.24) ஆஜராகிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம், செபி அமைப்பின் மாதவி புரி புச், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியது, காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இதையடுத்து, மத்திய நிதி அமைச்சகமும், புலனாய்வு அமைப்புகளும் அவர் மீதான விசாரணையை துவங்கின.இதில் ஆர்.இ.ஐ.டி., எனும் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்டுகளுக்கு சாதகமாக கொள்கை முடிவுகள் எடுத்து தனது கணவருக்கு தொடர்புடைய ‘பிளாக்ஸ்டோன்’ நிறுவனத்துக்கு உதவி செய்ததாக மாதவி புரி புச்…

Read More

விளையாட்டுகளில் சாதித்த 100 வீரர்கள்: அரசு பணி

பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதித்த 100 வீரர்களுக்கு பணி வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, துணை முதல்வர் உதயநிதி, சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். அதை செயல்படுத்த, மாவட்ட வாரியாக, தகுதியான விளையாட்டு வீரர்கள் பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கி உள்ளன. விளையாட்டு வீரர்களின் கல்வித் தகுதி, சர்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் வென்ற பதக்கத்திற்கு தகுந்தபடி, அரசு துறைகளில் விரைவில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளது.

Read More

கவர்னரின் நிகழ்ச்சியை தவிர்ப்பது ஏன்? அமைச்சர் கோவி.செழியன்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 56-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 54,714 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்தார்.இது தொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; தற்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கவர்னர் ஆர்.என்.ரவியின் செயலும், பேச்சும் தமிழர்களின் மனம் புண்படும்படி இருந்து வரும் காரணத்தால், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில்…

Read More

மாஜி அ.தி.மு.க., அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

சென்னை: ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்திற்கு சொந்தமான தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகே உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Read More

முக்கிய விளையாட்டுகள் காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது .

33-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2026-ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற உள்ளது . இந்நிலையில்செலவினத்தை குறைப்பதற்காக, 10 விளையாட்டுகள் தவிர முக்கிய விளையாட்டுகள் காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது .அதன்படி, ஆக்கி , மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல், கிரிக்கெட், டேபிள் டேன்னிஸ், ஸ்குவாஷ், பேட்மிண்டன் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளது.

Read More

மகாராஷ்டிரா: 288 சட்டசபை தொகுதிகளில் இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல்- அக்.29 கடைசி நாள்!

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் 288 தொகுதிகளிலும் இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி நடைபெறும் நிலையில் இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படுகிறது. மகாராஷ்டிராவில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய அக்டோபர் 29-ந் தேதி கடைசி நாளாகும். மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ந் தேதி பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Read More

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு சந்திரயான் 3 திட்ட பணிகளுக்காக உலக விண்வெளி விருது:

 இந்த ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் ஐஏஎப் உலக விண்வெளி விருது, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் மிகவும் மதிக்கப்படும், இந்த விருதை பெற்றுள்ள அவருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

Read More

 புயல், மழை பாதிப்புகளை துல்லியமாக கணிக்க, ஏற்காடு மற்றும் ராமநாதபுரத்தில், நவீன ரேடார்கள் அமைக்கும் பணியை, தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் துவக்கியுள்ளது.

தமிழகத்தில் சென்னை, காரைக்கால் என, இரு இடங்களில் மட்டுமே, இந்திய வானிலை துறையின் ரேடார்கள் உள்ளன. இவற்றின் வழியே புயல், காற்றின் வேகம், மழை குறித்த துல்லிய தகவல்கள் பெறப்படுகின்றன. இருப்பினும், தமிழக தென்மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் பருவ மழை காலத்தில், மேக வெடிப்பு போன்ற காரணங்களால், குறைந்த நேரத்தில் அதிக மழை கொட்ட வாய்ப்புள்ள விபரங்களை அறிய முடியவில்லை. இந்திய வானிலை துறையின், சென்னை மண்டல அலுவலக அதிகாரிகளுடன் ஆலோசித்து, இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த…

Read More

போன், இ-மெயில் என்றிருந்த நிலையில் தற்போது சமூக ஊடகம் மூலம் 6 நாளில் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கடும் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு முடிவு

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் முன்பெல்லாம் கட்டுப்பாட்டு அறை, இ-மெயிலில் மிரட்டல்களை விடுத்து வந்தனர். தற்போது அவர்கள் சில சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கின்றனர். வெடிகுண்டு மிரட்டலால் டிக்கெட் வாங்கி விமானத்தில் பயணம் செய்பவர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல் விவரிக்க முடியாதது. பெரும்பாலும், புறப்பட்ட பிறகு ெவடிகுண்டு மிரட்டல் செய்தி வருவதால், மீண்டும் விமான நிலையம் திரும்புவதா? அல்லது வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடுவதா? என்ற குழப்பங்களும் நடக்கிறது. அதனால் பாதுகாப்பு ஏஜென்சிகள்…

Read More