கர்நாடகத்தை தொடர்ந்து குஜராத்திலும் 2 வயதுக் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு

அகமதாபாத்: கர்நாடகத்தை தொடர்ந்து குஜராத்திலும் 2 வயதுக் குழந்தைக்கு ஹியுமன் மெட்டா நிமோவைரஸ் ‘HMPV’ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தின் சந்த்கேடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 வயது பெண் குழந்தை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பெங்களூருவில் 3 மாதக் குழந்தை மற்றும் 9 மாதக் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதித்துள்ளதாக தகவல்

Read More

திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் இன்று (ஜன.,06) வெளியிடப்பட்டது.

சென்னை: திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் இன்று (ஜன.,06) வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3.11 கோடி, பெண் வாக்காளர் 3.24 கோடி, 3ம் பாலினத்தவர்கள்- 9,120 பேர் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி கீழ் வேளூர்…

Read More

கவர்னரை கண்டித்து நாளை போராட்டம்: தி.மு.க., அறிவிப்பு

சென்னை: கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நாளை(ஜன.7) போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க., அறிவித்துள்ளது.மாவட்ட தலைநகரங்களில் நாளை காலை 10 மணியளவில் போராட்டம் நடைபெறும். பா.ஜ., ஆட்சி இல்லாத மாநிலங்களில் கவர்னர்கள் தனி ராஜாங்கம் நடத்துகிறார்கள். இதைக் கண்டித்து நாளை போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க., தெரிவித்துள்ளது.

Read More

கவர்னர் தமது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறினார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் இன்று(ஜன.6) காலை 9.30க்கு தொடங்கியது. இதில் கலந்து கொள்ள தலைமைச் செயலகம் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் இருவருக்கும் உரிய மரியாதை தரப்பட்டது. பின்னர் சபாநாயகர் அப்பாவு, கவர்னரை சட்டசபைக்குள் அழைத்துச் சென்றார். முதல் நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதையடுத்து, கவர்னர் தேசிய கீதம் பாட வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தெரிகிறது. அதை ஏற்க மறுத்ததால் கவர்னர் தமது உரையை வாசிக்காமல் அவையை விட்டு…

Read More