அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 1200 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்பதற்காக வந்த 959 காளைகளில் மருத்துவ பரிசோதனையில் 3 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மீதமுள்ள 956 காளைகள் கோவில் காளைகள் உட்பட 1000 காளைகள் இன்று களம் கண்டன.மொத்தம் 9 சுற்றுகள் நடத்தப்பட்டது. மொத்தம் 1000 காளைகள்…

Read More

இஸ்ரோ வரலாற்று சாதனை

ஸ்பேடெக்ஸ் (SpaDex) திட்டத்தின் கீழ், பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட 2 விண்கலங்களையும் இஸ்ரோ வெற்றிகரமாக இணைத்துள்ளது. இந்த இணைப்பு செயல்முறையை (Docking) வெற்றிகரமாக செய்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளதாக, இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது SDX01 (Chaser) மற்றும் SDX02 (Target) ஆகிய இரு செயற்கைக்கோள்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அவை தற்போது வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளன. இணைப்பு செயல்முறை துல்லியமாக தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோன்று…

Read More

பாலமேடு ஜல்லிக்கட்டு

மதுரை பாலமேட்டில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், ஆயிரம் காளைகள் பங்கேற்றுள்ளன. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கி நத்தம் பார்த்திபன் முதலிடம் பிடித்தார். மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசி 12 காளைகளை அடக்கி 2ம் இடத்தை பிடித்தார். பொதும்பு பிரபாகரன் 11 காளைகளை அடக்கி 3வது இடம் பிடித்துள்ளார். சத்திரப்பட்டி விஜய தங்க பாண்டியன் என்பவரின் காளை, சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக முதலமைச்சர் சார்பில் டிராக்டர்…

Read More

காசாவில் போரை நிறுத்த இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்பந்தம்

காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 15 மாத காலமாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வர உள்ளது. போர்நிறுத்தம் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், இதற்காக நடவடிக்கை எடுத்த அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்துக்கான மத்தியஸ்தப் பணியில் அமெரிக்கா மற்றும் கத்தார் நாடுகள் ஈடுபட்டன. காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள்…

Read More