ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!!

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் சாலை மறியல் போராட்டத்துக்கு தடை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து பரிசீலிக்க 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் எந்தவித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது

Read More

அரசு ஊழியர்கள் சங்கத்தின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை குறித்து சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Read More

மாமல்லபுரத்தில் பிப்.,26ல் த.வெ.க., 2ம் ஆண்டு விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா,துவக்க விழாவை ஒருங்கிணைக்க 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் பிப்ரவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் உட்பட 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு, மாவட்ட செயலர்களை வரவழைத்து, கட்சி சார்பில் அனுமதி சீட்டுகள் நேற்று வழங்கப்பட்டன. துவக்க விழாவில் பங்கேற்கும் கட்சியினருக்கு, கியூ.ஆர்., ரகசிய குறியீடுடன் அடையாள அட்டை வழங்கப்பட்டு…

Read More