இந்திய கூட்டாட்சியை காக்கும் வரலாற்றின் மிக முக்கியமான நாள் இது. தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளோம். இது எண்ணிக்கை பற்றியதல்ல அதிகாரத்தை பற்றியது என்று தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னையில் நடந்த தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: இந்தியாவின் பலம். மத்திய அரசு மாநிலங்களுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். கூட்டுக்குழு கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் பேசியதாவது: அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க முன்னெடுப்பை எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் தண்டனை தொகுதி மறுசீரமைப்பு. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார். 1971ம் ஆண்டு மக்கள் தொகையே தொகுதி மறுசீரமைப்புக்கு அடிப்படையாக இருக்க வேண்டும். புதிய மக்கள்தொகை அடிப்படையில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பை நிராகரிப்பதாக கடந்தாண்டே கர்நாடக பேரவையில் தீர்மானம், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டம் என்பது வடக்கு, தெற்கு இடையிலான மோதல் அல்ல. இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்வதற்கான முன்னெடுப்புதான் இந்த கூட்டம். கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் ஒடிசாவில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அம்மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உரை நிகழ்த்தினார். அதில் பேசிய அவர்,”மாநிலங்களின் ஜனநாயக உரிமையை காப்பதற்கான மிக முக்கியமான கூட்டம் இது. நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம்; மக்கள் தொகையை நாம் கட்டுப்படுத்தியிருக்காவிட்டால் மிகவும் பெருகி வளர்ச்சி பாதித்திருக்கும். மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை ஒன்றிய அரசு தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தண்டிக்கக் கூடாது. நமது மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனைதான் தொகுதி மறுவரையறை என கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
