இதுவரை தமிழகம் காணாத ஒரு தேர்தலை அடுத்தாண்டில் தமிழகம் காணப் போகிறது. இரண்டே இரண்டு பேருக்கு இடையில் தான் போட்டி. த.வெ.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் தான் தேர்தலில் போட்டி நிலவும்,” என்று கட்சி பொதுக்குழுவில் நடிகர் விஜய் பேசினார். சட்டம் ஒழுங்கு என்று ஒன்னு இருக்கிறதாகவே தெரியவில்லை. அது எல்லாம் இந்த கரப்ஷன், கபடதாரிகள் கவர்மென்ட் தான் காரணம். இந்த நிலைமை மாற வேண்டும்.மன்னராட்சி முதல்வர் அவர்களே, உங்க ஆட்சியை பற்றி கேள்வி கேட்டால் மட்டும் ஏன் சார் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது. நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தி இருந்தீங்க என்றால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்காக இருந்திருக்கும். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். பச்ச புள்ளைங்க, படிக்கிற புள்ளைங்க, சின்ன குழந்தைங்க, வீட்டில் இருக்கும் பெண்கள், இவங்க எல்லோருக்கும் நடக்கிற கொடுமைகளை சொல்ல முடியல சார். இதுல வேற உங்களை அப்பா என்று கூப்பிடுகிறார்கள் என்று சொல்கிறீர்கள். இங்கு நீங்கள்தான் இப்படி என்றால், அங்கு உங்களது சீக்ரெட் ஓனர், அவர்கள் உங்களுக்கும் மேலே. பிரதமர் மோடி அவர்களே, என்னமோ உங்களது பெயர்களை எல்லாம் சொல்வதற்கு எங்களுக்கு எல்லாம் ஏதோ பயம் என்று சிலர் கூறுகின்றனர். மத்தியில் ஆள்பவர்கள் என்று சொல்கிறோம். மத்தியில் ஆட்சியில் இருப்பது யார் காங்கிரஸா? மாநிலத்தில் ஆள்பவர்கள் என்று பேசுகிறோம். இங்கு ஆள்பவர்கள் யார் அதிமுகவா? பிறகு என்ன பெயர் சொல்ல வேண்டும் என்று கூறுவது? எனக்கு ஒன்றும் புரியவில்லையே இப்படி உங்களது பெயரைச் சொல்லியே மக்களை ஏமாற்றுவதும், உங்களது பெயரைச் சொல்லியே மக்களை பயமுறுத்துவதும், இப்படி இந்த கரப்ஷன் கபடதாரிகளுக்கு மறைமுகமாக உதவும். பாஜக அரசுக்கு ஏன் ஜி? தமிழ்நாடு தமிழர்கள் என்றாலே அலர்ஜி? தமிழகத்தில் வரும் ஜிஎஸ்டி-யை சரியாக வாங்கிக் கொள்கிறீர்கள். ஆனால் தமிழகத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யமாட்டேன் என்கிறீர்கள். தமிழக குழந்தைகளின் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கிறீர்கள். ஆனால் மும்மொழிக் கொள்கையைத் திணிக்கிறீர்கள். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதிகளிலும் கை வைக்கப் பார்க்கிறீர்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்கள் தொடங்கும்போதே உங்கள் திட்டம் என்னவென்று புரிந்துவிட்டது பிரதமர் சார். எங்கு, எப்படி எந்த திசையில் எல்லாம் இந்த நாட்டைக் கொண்டு செல்லலாம் என்பது. உங்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்வது, தமிழகத்தைக் கொஞ்சம் கவனமாக கையாளுங்கள். காரணம், தமிழகம் பல பேருக்கு தண்ணீர் காட்டிய மாநிலம். பார்த்துக் கொள்ளுங்கள், பார்த்து செய்யுங்கள்.
