உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லாவின் இந்த முடிவு, இந்திய சந்தையில் எலகட்ரிக் கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தாலும், இப்பிரிவை மேம்படுத்துவதற்கு மற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது மொத்த கார் விற்பனையில் எலக்ட்ரிக் வாகனங்கள் 3% மட்டுமே என்றாலும், 2030-ஆம் ஆண்டுக்குள் இது 30% ஆக உயர்த்துவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த வளர்ச்சி, உலகளாவிய வாகன உற்பத்தியாளர்களுக்கு இந்தியா ஒரு முக்கிய இலக்காக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வின்பாஸ்ட் தமிழ்நாட்டில் பிரம்மாண்ட தொழிற்சாலை அமைத்து உற்பத்தி பணிகளை துவங்க காத்திருக்கும் வேளையில் டெஸ்லா இந்தியாவுக்கு வர மறுப்பு தெரிவித்துள்ளது பிற நிறுவனங்களுக்கும், பிற முதலீடுகளுக்கும் மத்திய அரசு முக்கியதுவம் அளிக்கப்படும். ஐரோப்பாவின் மெர்சிடிஸ்-பென்ஸ், ஸ்கோடா-வோக்ஸ்வாகன் (VW), தென் கொரியாவின் ஹூண்டாய், கியா மற்றும் வியட்நாமின் வின்ஃபாஸ்ட் ஆகியவை இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஆர்வம் காட்டியுள்ளன. உலகின் மூன்றாவது பெரிய வாகன சந்தையான இந்தியாவில், இந்நிறுவனங்கள் உற்பத்தி வசதிகளை அமைப்பதற்கு தயாராக உள்ளன.எலக்ட்ரிக் கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையில் மத்திய அரசின் அடுத்தக்கட்ட திட்டம் குறித்து மத்திய அமைச்சர் குமாரசாமி கூறுகையில், “எலக்ட்ரிக் பயணிகள் கார்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு (SPMEPCI) விரைவில் விண்ணப்பங்கள் பெறப்படும்,” என்றார். இந்தத் திட்டம் உலகளாவிய முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, டெஸ்லா கைவிரித்த காரணத்தால் மத்திய அரசு பெரும் சலுகையுடன் மிகப்பெரிய சலுகையை SPMEPCI திட்டத்தின் கீழ் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
