தாளமுத்து – நடராசன் நினைவிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

இந்தி எதிர்ப்பு போரில் சிறை சென்று உயிர் நீத்த தாளமுத்து மற்றும் நடராசனின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். கடந்த 1938ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி தொடங்கிய மொழிப்போர் ஒன்றரை ஆண்டுக்காலம் தொடர்ந்து நடந்தது. இதில் மாணவர்கள் பலரும் பங்கு கொண்டனர். பல்லாயிரம் பேர் சிறை சென்றனர். சென்னை அடையார், தியாசபிகல் பள்ளி முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சென்னை, பெரம்பூர் பண்ணைக்கார ஆண்டியப்பன் தெருவில் வசித்துவந்த லட்சுமணன்-அம்மாக்கண்ணு இணையருக்கு 1919ம் ஆண்டு…

Read More

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியதும் மாதாந்திர மின் கணக்கெடுப்பு:

சென்னை: ”மாதந்தோறும் மின் நுகர்வு கணக்கிடும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விரைவில், அது நடைமுறைக்கு வரும்,” என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Read More

ஆஸ்கர் போட்டியில் இந்திய குறும்படம்

2025ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் என்ற பிரிவில் இந்தியாவைச் சார்ந்த அனுஜா என்ற குறும்படம் இடம்பிடித்திருக்கிறது. ஆடம் ஜே.கிரேவ்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை குனீத் மோங்கா, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர். இந்த குறும்படத்தில், 9 வயது சிறுமி குழந்தை தொழிலாளராக பணிபுரிந்து பட்ட இன்னல்கள் குறித்து தெள்ள தெளிவாக பேசப்பட்டு உள்ளது. இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட கங்குவா, Girls Will Be Girls, All We Imagine…

Read More

காரைக்குடியில் முதல்வர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் ப.சிதம்பரம் குடும்பத்தாரால் கட்டப்பட்டுள்ள லட்சுமி வளர் தமிழ் நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மற்றும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களின் நிதி பங்களிப்பில் 5 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.பின்னர் பல்கலைக்கழக அரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றி விட்டு சிறிது ஓய்வுக்கு பின்…

Read More

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 1200 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்பதற்காக வந்த 959 காளைகளில் மருத்துவ பரிசோதனையில் 3 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மீதமுள்ள 956 காளைகள் கோவில் காளைகள் உட்பட 1000 காளைகள் இன்று களம் கண்டன.மொத்தம் 9 சுற்றுகள் நடத்தப்பட்டது. மொத்தம் 1000 காளைகள்…

Read More

இஸ்ரோ வரலாற்று சாதனை

ஸ்பேடெக்ஸ் (SpaDex) திட்டத்தின் கீழ், பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட 2 விண்கலங்களையும் இஸ்ரோ வெற்றிகரமாக இணைத்துள்ளது. இந்த இணைப்பு செயல்முறையை (Docking) வெற்றிகரமாக செய்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளதாக, இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது SDX01 (Chaser) மற்றும் SDX02 (Target) ஆகிய இரு செயற்கைக்கோள்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அவை தற்போது வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளன. இணைப்பு செயல்முறை துல்லியமாக தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோன்று…

Read More

பாலமேடு ஜல்லிக்கட்டு

மதுரை பாலமேட்டில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், ஆயிரம் காளைகள் பங்கேற்றுள்ளன. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கி நத்தம் பார்த்திபன் முதலிடம் பிடித்தார். மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசி 12 காளைகளை அடக்கி 2ம் இடத்தை பிடித்தார். பொதும்பு பிரபாகரன் 11 காளைகளை அடக்கி 3வது இடம் பிடித்துள்ளார். சத்திரப்பட்டி விஜய தங்க பாண்டியன் என்பவரின் காளை, சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக முதலமைச்சர் சார்பில் டிராக்டர்…

Read More

காசாவில் போரை நிறுத்த இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்பந்தம்

காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 15 மாத காலமாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வர உள்ளது. போர்நிறுத்தம் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், இதற்காக நடவடிக்கை எடுத்த அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்துக்கான மத்தியஸ்தப் பணியில் அமெரிக்கா மற்றும் கத்தார் நாடுகள் ஈடுபட்டன. காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள்…

Read More

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1 லட்சம் பரிசு வென்ற வீரர்!

சிவகங்கை மாவட்டம், ஆவாரங்காடு முத்துக்காளை, ரவி, மணிமாறன்பிரதர்ஸ் சார்பில் அவிழ்க்கப்பட்ட காளையை அடக்கினால் 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் 2 தங்க காசு அறிவிக்கப்பட்டது. இந்த காளையை அவனியாபுரம் ரஞ்சித் அடக்கினார் அவருக்கு பரிசுகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

Read More

அனல் பறந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது. இதில் 19 காளைகளைப் பிடித்த திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவருக்கு முதல் பரிசாக காரும், கன்றுடன் கூடிய பசுவும் வழங்கப்பட்டன. இதேபோல், சிறந்த காளைக்கான முதல் பரிசை வி.கே.சசிகலாவின் காளை வென்றது. காளை வளர்ப்பாளர் மலையாண்டி பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்

Read More