
2025


தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
தமிழர் திருநாளாம் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதிகாலையில் எழுந்த மக்கள், நீராடி, புத்தாடை அணிந்து மகிழ்ந்தனர். பின்னர், சூரியனை வணங்கி, கரும்புகள் வைத்து, புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர். வீடுகள் முன்பு, வாசல்களில் பல வண்ண கோலமிட்டு, புத்தம் புது பானைகளில் புத்தரிசி இட்டு பொங்கலிட்டு பெண்கள் மகிழ்ந்தனர்.உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து செய்தியை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

போகிப் பண்டிகை கொண்டாட்டம் : புகை மூட்டம், பனிமூட்டம் காரணமாக சென்னையில் 30 விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு!
போகிப் பண்டிகையால் ஏற்பட்ட புகை மூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் 30 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு வர வேண்டிய, புறப்பட வேண்டிய 30 விமானங்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டன. டெல்லி, பெங்களூருவில் இருந்து சென்னை வர வேண்டிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் ஓடு பாதையே தெரியாத அளவுக்கு புகை மூட்டம் காணப்படுவதால் விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது

டயர், டியூப் எரிக்காமல் போகி கொண்டாட வேண்டுகோள்
சென்னை : ‘பொதுமக்கள் டயர், டியூப் போன்றவற்றை எரிக் காமல், போகி பண்டி கையை கொண்டாட வேண் டும்’ என, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. போகி அன்று பொருட்களை எரிக்கும் போது ஏற்படும் புகையால் காற்று மாசு அடைகிறது, மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.விமானங்கள் வருகை, புறப்பாடு தாமதமாகிறது. வாகன விபத்துக்கும் புகை காரணமாகிறது.எனவே, பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில்,…

ஆஸ்கார் போட்டியில் 323 படங்கள் கங்குவா 10 இடத்துக்குள் வருமா?.
வரும் மார்ச் 2ஆம் தேதி 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம், சிறந்த இசை, சிறந்த இயக்குநர் போன்ற பல்வேறு பிரிவுகளில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இதில் சிறந்த படம் (Best Picture) என்ற பிரிவின் கீழ் இந்திய மொழிகளை சேர்ந்த 7 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அவை கங்குவா, ஆடு ஜீவிதம், சந்தோஷ், ஸ்வதந்திர வீர் சவார்க்கர், ஆல் வி இமேஜின்…

விண்கலன்களை இணைக்கும் நிகழ்வு மீண்டும் ஒத்திவைப்பு
ஸ்ரீஹரிகோட்டா: கடந்த டிச.,30ல் விண்ணில் செலுத்தப்பட்ட 220 கிலோ எடை கொண்ட இரு விண்கலன்களை இணைக்கும் நாளைய நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.கடந்த டிச.,30ம் தேதி , தலா 220 கிலோ எடை கொண்ட சேஸர், டார்கெட் ஆகிய விண்கலன்களை உள்ளடக்கிய ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள், பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதோடு, 24 ஆய்வு கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டன.இதைத் தொடர்ந்து, ஜன.,07 அன்று இரு விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப்பணியை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்,…

திருப்பதியில் கூட்ட நெரிசல்; 6 பேர் பலி
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவத்திற்கு தேவஸ்தானம் மன்னிப்பு கோரியது. ஒரே கவுன்டரில் 5,000க்கும் மேற்பட்டோர் திரண்டது எதிர்பாராதது என விளக்கம் அளித்துள்ளது.ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்புடன் வைகுண்ட ஏகாதசி தரிசனம் துவங்குகிறது. வரும் 19ம் தேதி வரை வைகுண்ட துவாரம், பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட…

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை நியமித்து மத்திய அரசின் நியமனக்குழு நியமனம் செய்துள்ளது.

பொங்கலுக்கு 10 படங்கள்
விடாமுயற்சி வெளியாகவில்லை என்றவுடன், கிட்டத்தட்ட 8 சிறிய திரைப்படங்கள், பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளன. வணங்கான், கேம்சேஞ்சர் படங்களோடு சேர்த்து, படைத்தலைவன், டென் ஹவர்ஸ், காதலிக்க நேரமில்லை, மெட்ராஸ்காரன், தருணம், 2கே கிட்ஸ், சுமோ, நேசிப்பாயா என மொத்தமாக, 10 படங்கள் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளன.

‘டங்ஸ்டன்’ திட்டத்தை ரத்து செய்யக்கோரி மேலூர் விவசாயிகள், பொதுமக்கள் பேரணி
டங்ஸ்டன் ’ திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், 15 கி.மீ நடைபயண போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலூர் பகுதி ஒரு போக பாசன விவசாயிகள் மற்றும் மேலூர் தொகுதி மக்கள் ஒன்றிணைந்து மதுரை ,திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சிக்கம்பட்டி டோல்கேட் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் நடை பயணமாக சென்று தல்லாகுளம் மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர். இதன்படி…