டெல்லியில் பிப்.5ம் தேதி தேர்தல் 

டெல்லியில் 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிப்.5ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். டெல்லியில் 70 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் பிப்.8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன.10இல் தொடங்கி 17இல் நிறைவடையும்.   ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்ரவரி.5ம் தேதி இடைத்தேர்தல்

Read More

துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிக அதிகாரம்

துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலும், கல்வித்துறையை சாராதவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கும் வகையிலும் யுஜிசி கொண்டு வந்துள்ள விதிமுறைகள், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி மீதான நேரடி தாக்குதல். மத்திய பா.ஜ., அரசின் இந்த நடவடிக்கையானது, அதிகாரங்களை ஒரே இடத்தில் குவிக்கவும், ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரங்களை குறைக்கவும் வழிவகுக்கும். கல்வியானது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளின் கைகளில் மட்டுமே இருக்க வேண்டுமே அன்றி, பா.ஜ., அரசின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும்,…

Read More

கர்நாடகத்தை தொடர்ந்து குஜராத்திலும் 2 வயதுக் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு

அகமதாபாத்: கர்நாடகத்தை தொடர்ந்து குஜராத்திலும் 2 வயதுக் குழந்தைக்கு ஹியுமன் மெட்டா நிமோவைரஸ் ‘HMPV’ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தின் சந்த்கேடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 வயது பெண் குழந்தை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பெங்களூருவில் 3 மாதக் குழந்தை மற்றும் 9 மாதக் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதித்துள்ளதாக தகவல்

Read More

திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் இன்று (ஜன.,06) வெளியிடப்பட்டது.

சென்னை: திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் இன்று (ஜன.,06) வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3.11 கோடி, பெண் வாக்காளர் 3.24 கோடி, 3ம் பாலினத்தவர்கள்- 9,120 பேர் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி கீழ் வேளூர்…

Read More

கவர்னரை கண்டித்து நாளை போராட்டம்: தி.மு.க., அறிவிப்பு

சென்னை: கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நாளை(ஜன.7) போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க., அறிவித்துள்ளது.மாவட்ட தலைநகரங்களில் நாளை காலை 10 மணியளவில் போராட்டம் நடைபெறும். பா.ஜ., ஆட்சி இல்லாத மாநிலங்களில் கவர்னர்கள் தனி ராஜாங்கம் நடத்துகிறார்கள். இதைக் கண்டித்து நாளை போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க., தெரிவித்துள்ளது.

Read More

கவர்னர் தமது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறினார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் இன்று(ஜன.6) காலை 9.30க்கு தொடங்கியது. இதில் கலந்து கொள்ள தலைமைச் செயலகம் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் இருவருக்கும் உரிய மரியாதை தரப்பட்டது. பின்னர் சபாநாயகர் அப்பாவு, கவர்னரை சட்டசபைக்குள் அழைத்துச் சென்றார். முதல் நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதையடுத்து, கவர்னர் தேசிய கீதம் பாட வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தெரிகிறது. அதை ஏற்க மறுத்ததால் கவர்னர் தமது உரையை வாசிக்காமல் அவையை விட்டு…

Read More

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பெ.சண்முகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பெ.சண்முகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாயிகளுக்காக உழைத்த சண்முகத்துக்கு கடந்த ஆண்டு அம்பேத்கர் விருதை அரசு வழங்கியது. அம்பேத்கர் விருது பெற்ற சிறப்புக்குரிய தோழர் சண்முகம் புதிய மாநிலச் செயலாளராக தேர்வானது மகிழ்ச்சி என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Read More

பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை!

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் இந்த வருடம் ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. அதைத் தொடர்ந்து, 15ம் தேதி திருவள்ளுவர் நாளாகவும், ஜன., 16ம் தேதி உழவர் நாளாகவும் கொண்டப்படுகிறது. இதையொட்டி, ஜன., 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 16ம் தேதி (வியாழக்கிழமை) வரை 3 நாட்கள் அரசு விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜன.,17ம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு வேலை நாளாக இருந்தது.இந்த நிலையில், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள்…

Read More

சிறாவயலில் ஜன.16ல் ஜல்லிக்கட்டு ,  முதற்கட்ட பணிகள் துவக்கம் 

சிவகங்கை: மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிறாவயல் ஜல்லிக்கட்டு ஜன.,16 ல் நடக்க உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளை விழா கமிட்டியினர் துவக்கியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் தை பொங்கலை முன்னிட்டு ஜன., முதல் மே வரை சிறாவயல், கண்டுபட்டி, அரளிப்பாறை உட்பட 150 க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமஞ்சுவிரட்டுக்கள் நடைபெறும். குறிப்பாக மாட்டுப்பொங்கல் அன்று வரும் சிறாவயல் ஜல்லிக்கட்டு, ஜன. 16ல் நடைபெற உள்ளது. சிறாவயல் ஜல்லிக்கட்டில் பங்கேற்க சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை…

Read More

குகேஷ், மனு பாகருக்கு கேல் ரத்னா விருது

புதுடில்லி: உலக செஸ் சாம்பியன் குகேஷ், ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற மனு பாகருக்கு மத்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக செஸ் சாம்பியன் குகேஷ்ஹாக்கி வீராங்கனை ஹர்மன்ப்ரீத் சிங் பாரா தடகள வீரர் பிரவீன் குமார்ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற மனு பாகர்ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

Read More