சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகள் விரிவாக்கம்:

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகளை இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் உருவாக்குவது தொடர்பாக 5 அரசாணைகள் வெளியிடப்படுகிறது.தமிழ்நாடு…

Read More

போபால் ஆலை நச்சுக்கழிவு; 40 ஆண்டுக்குப் பிறகு அகற்றம்

போபால்: மத்திய பிரதேசத்தின் போபாலில் அமைந்துள்ள, ‘யூனியன் கார்பைட்’ பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில், 1984 டிச., 23ல், விஷயவாயு கசிவு ஏற்பட்டது. மிகவும் கோரமான இந்த சம்பவத்தில், 5,479 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர, உடல் உறுப்புகளை இழந்து நிரந்தர சுகாதார பிரச்னைகளால், ஐந்து லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூடப்பட்டுள்ள இந்த ஆலையில் உள்ள, 3 லட்சத்து 77,000 கிலோ கழிவுகளை அகற்றுவது தொடர்பான பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக விசாரித்த மத்திய பிரதேச…

Read More

கார்ல்சனுக்கு ஜீன்ஸால் வந்த சோதனை!

செஸ் விளையாட்டில் முன்னணி வீரர் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இவர் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டி ஒன்றுக்கு ஜீன்ஸ் அணிந்து வந்தது சர்ச்சையானது. நியூயார்க்கில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த கார்ல்சனுக்கு ஃபிடே அமைப்பு அபராதம் விதித்து, ஜீன்ஸ்சை மாற்றிவிட்டு போட்டியில் கலந்து கொள்ளுமாறு வார்னிங் தந்தது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார் கார்ல்சன்.இரண்டே நாள்களில் ஆடை விதிமுறைகள்…

Read More

உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் சென்னை வீராங்கனை வைஷாலி வெண்கலப் பதக்கம் வென்றார்

நியூயார்க்: உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் சென்னை வீராங்கனை வைஷாலி வெண்கலப் பதக்கம் வென்றார். அரை இறுதியில் சீன வீராங்கனை ஜு வென்ஜுனிடம் தோற்றதை அடுத்து வைஷாலிக்கு வெண்கலம் கிடைத்தது. சீன வீராங்கனை ஜு வென்ஜுனிடம் 0.5-2.5 என்ற புள்ளி கணக்கில் வைஷாலி தோல்வியடைந்தார்.

Read More

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்

ஆன்லைன் மோசடிகளை தடுக்க செயலற்ற வங்கிக்கணக்குகள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேலாக பணப் பரிமாற்றம் நடக்காத வங்கிக் கணக்குகள், நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

Read More

மருந்துகள் விலை உயர்வு ஏன்? விளக்கம் கேட்கிறது நிலைக்குழு

புதுடில்லி: கடந்த அக்டோபரில், 11 மருந்துகள் மீது 50 சதவீத விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்ததற்கு விளக்கம் அளிக்கும்படி, தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு பார்லி., நிலைக்குழு உத்தரவிட்டுள்ளது.என்.பி.பி.ஏ., எனப்படும் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம், கடந்த அக்டோர் 15ம் தேதி வெளியிட்ட உத்தரவில், 11 மருந்துகளுக்கான விலையை 50 சதவீதம் அதிகரிக்க அனுமதித்துள்ளது. பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளுக்கு ஏற்ப விலையை உயர்த்த கோரி மருந்து நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்றதாக அது…

Read More