பழனியாண்டவரை தரிசிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்பதால் அதை பார்க்க வந்தேன். நேர்த்திக் கடன் செலுத்த வந்ததாக செய்திகளைக் கிளப்பி விடுவர். உண்மையில் அதற்காக வரவில்லை.
காலம் காலமாக ஆதிக்க சக்திகளுக்கு அடிமைகளாக இருக்கும் மக்களை, ஆட்சி அதிகார பீடத்தில் அமரும் வகையில், அவர்களை மாற்ற வேண்டும். அதற்கு அம்மக்களை தகுதிப்படுத்த வேண்டும்.
எனக்கும் முதல்வர் பதவி கனவு உண்டு. அதற்கேற்ப, இன்று முதல் புள்ளியை துவக்கியுள்ளோம். போகப்போக கனவை நனவாக்கும் இலக்கு நோக்கி வேகமாக பயணப்படுவோம்.ஆயக்குடியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவன்.
