சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுப் போட்டி இன்று முதல் (நவம்பர் 25) டிசம்பர் 13-ம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான டி. குகேஷ், நடப்பு உலக சாம்பியனும், சீன வீரருமான டிங் லிரெனை எதிர்கொண்டு விளையாடவுள்ளார். இந்தப் போட்டியில் உலக சாம்பியன் லிரெனுடன் மோதும், 18 வயதான தமிழக வீரரான டி. குகேஷ் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் குகேஷ் வெற்றி பெற்றால், மிக இளம் வயதில் உலக செஸ் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை புரிவார்.
