மகாராஷ்டிரா முதல்வர் யார் என்ற கேள்விக்கு தேர்தல் முடிவு வெளியான 12 நாளுக்கு பிறகு விடை கிடைத்துள்ளது. பாஜவை சேர்ந்த தேவேந்திர பட்நவிஸ் நேற்று தேர்வு செய்யப்பட்டார். மும்பை ஆசாத் மைதானத்தில் இன்று பதவியேற்பு விழா நடக்கிறது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள், மத தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
