சென்னை: ஆங்கிலப்புத்தாண்டு முன்னிட்டு, சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டிச.,31 இரவு 10 மணி முதல் ஜன.,1 காலை 6 மணி வரை மேம்பாலங்கள் மூடப்படும் என்றும் சென்னை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். கடற்களை உட்புற சாலை டிச.,31 அன்று இரவு 7 மணி முதல் ஜன.,1 காலை 6 மணி போக்குவரத்துக்கு மூடப்படும். உட்புற சாலையில் நாளை இரவு 7 மணி முதல் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற வேண்டும். காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை டிச.,31 இரவு 8 மணி முதல் ஜன.,1 காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு மூடப்படும்.அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள், கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு மந்தவெளி ஆர்.ஏ.புரம் 2ம் மெயின் ரோடு, ஆர்.கே.மடம் ரோடு, லஸ் மயிலாப்பூர் வழியாக சென்று அவர்களது இலக்கை அடையலாம். விபத்து இல்லாத புத்தாண்டு கொண்டாடும் நோக்கில், போக்குவரத்து மாற்றங்களை சென்னை போலீசார் அறிவித்துள்ளனர்.
