சென்னை: கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நாளை(ஜன.7) போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க., அறிவித்துள்ளது.மாவட்ட தலைநகரங்களில் நாளை காலை 10 மணியளவில் போராட்டம் நடைபெறும். பா.ஜ., ஆட்சி இல்லாத மாநிலங்களில் கவர்னர்கள் தனி ராஜாங்கம் நடத்துகிறார்கள். இதைக் கண்டித்து நாளை போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க., தெரிவித்துள்ளது.
