சென்னை: திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் இன்று (ஜன.,06) வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3.11 கோடி, பெண் வாக்காளர் 3.24 கோடி, 3ம் பாலினத்தவர்கள்- 9,120 பேர் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி கீழ் வேளூர் தொகுதியில் தான் குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்கள் உள்ளனர். கீழ்வேளூர் (நாகை) மொத்த வாக்காளர்கள் : 1,76,505 அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லுார் உள்ளது. சோழிங்கநல்லுார் தொகுதி (செங்கல்பட்டு) மொத்த வாக்காளர்கள்: 6,90,958 பேர். ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் மென் நகலினை (புகைப்படமின்றி) வாக்காளர் பதிவு அலுவலரிடமிருந்து ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.100/-வீதம் கட்டணம் செலுத்தி பெறலாம்.
