துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலும், கல்வித்துறையை சாராதவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கும் வகையிலும் யுஜிசி கொண்டு வந்துள்ள விதிமுறைகள், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி மீதான நேரடி தாக்குதல். மத்திய பா.ஜ., அரசின் இந்த நடவடிக்கையானது, அதிகாரங்களை ஒரே இடத்தில் குவிக்கவும், ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரங்களை குறைக்கவும் வழிவகுக்கும். கல்வியானது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளின் கைகளில் மட்டுமே இருக்க வேண்டுமே அன்றி, பா.ஜ., அரசின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும், கவர்னரின் கட்டளைக்கு ஏற்ப இருக்கக்கூடாது. முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
