திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவத்திற்கு தேவஸ்தானம் மன்னிப்பு கோரியது. ஒரே கவுன்டரில் 5,000க்கும் மேற்பட்டோர் திரண்டது எதிர்பாராதது என விளக்கம் அளித்துள்ளது.ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்புடன் வைகுண்ட ஏகாதசி தரிசனம் துவங்குகிறது. வரும் 19ம் தேதி வரை வைகுண்ட துவாரம், பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, சேலத்தைச் சேர்ந்த மல்லிகா, பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலா உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.
