வரும் மார்ச் 2ஆம் தேதி 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம், சிறந்த இசை, சிறந்த இயக்குநர் போன்ற பல்வேறு பிரிவுகளில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இதில் சிறந்த படம் (Best Picture) என்ற பிரிவின் கீழ் இந்திய மொழிகளை சேர்ந்த 7 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அவை கங்குவா, ஆடு ஜீவிதம், சந்தோஷ், ஸ்வதந்திர வீர் சவார்க்கர், ஆல் வி இமேஜின் அஸ் எ லைட், கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ் மற்றும் புதுல். சிறந்த படம் என்ற பிரிவின் கீழ் கங்குவா திரைப்படமும் போட்டியில் இருக்கிறது. அத்துடன், மேலும் 322 படங்கள் என மொத்தம் சிறந்த படம் என்ற பிரிவின் கீழ் கங்குவா திரைப்படமும் போட்டியில் இருக்கிறது. அத்துடன், மேலும் 322 படங்கள் என மொத்தம் 323 படங்கள் போட்டியில் இருக்கின்றன. இதில் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் இடம் பெறும் 10 படங்களை அகாடமி உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். அதற்கான வாக்கெடுப்பு ஜனவரி 8-ம் தேதி முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை நடைபெறும். ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியல் ஜனவரி 17-ஆம் தேதி வெளியாகும்.
