மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது. இதில் 19 காளைகளைப் பிடித்த திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவருக்கு முதல் பரிசாக காரும், கன்றுடன் கூடிய பசுவும் வழங்கப்பட்டன. இதேபோல், சிறந்த காளைக்கான முதல் பரிசை வி.கே.சசிகலாவின் காளை வென்றது. காளை வளர்ப்பாளர் மலையாண்டி பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்
