மதுரை பாலமேட்டில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், ஆயிரம் காளைகள் பங்கேற்றுள்ளன. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கி நத்தம் பார்த்திபன் முதலிடம் பிடித்தார். மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசி 12 காளைகளை அடக்கி 2ம் இடத்தை பிடித்தார். பொதும்பு பிரபாகரன் 11 காளைகளை அடக்கி 3வது இடம் பிடித்துள்ளார். சத்திரப்பட்டி விஜய தங்க பாண்டியன் என்பவரின் காளை, சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கான இரண்டாவது பரிசை வென்ற சின்னப்பட்டி கார்த்திக் என்பவரின் காளைக்கு, பொன்குமார் என்ற ஆர்வலர் நாட்டுப்பசுவுடன் கூடிய கன்றை பரிசாக வழங்கினார். சிறந்த காளைக்கான மூன்றாவது பரிசு பெற்ற குருவித்துறை பவித்ரன் என்பவரின் காளைக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.
