மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் ப.சிதம்பரம் குடும்பத்தாரால் கட்டப்பட்டுள்ள லட்சுமி வளர் தமிழ் நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மற்றும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களின் நிதி பங்களிப்பில் 5 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.பின்னர் பல்கலைக்கழக அரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றி விட்டு சிறிது ஓய்வுக்கு பின் அழகப்பா விருந்தினர் மாளிகையிலிருந்து தனியார் மகால் வரை 4 கிலோமீட்டர் நடைபயணமாக மக்களை சந்தித்தார்.
