2025ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் என்ற பிரிவில் இந்தியாவைச் சார்ந்த அனுஜா என்ற குறும்படம் இடம்பிடித்திருக்கிறது. ஆடம் ஜே.கிரேவ்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை குனீத் மோங்கா, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர். இந்த குறும்படத்தில், 9 வயது சிறுமி குழந்தை தொழிலாளராக பணிபுரிந்து பட்ட இன்னல்கள் குறித்து தெள்ள தெளிவாக பேசப்பட்டு உள்ளது. இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட கங்குவா, Girls Will Be Girls, All We Imagine As Light, ஆடுஜீவிதம், வீர் சாவர்க்கர் படங்களில் எதுவும் தேர்வாகவில்லை.
