மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான விருதுகளை பெறுபவர்களின் பட்டியல் குடியரசு தினத்தை ஒட்டி நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 139 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பத்ம விபூஷண் விருது 7 பேருக்கும், பத்ம பூஷண் விருது 19 பேருக்கும், பத்ம ஸ்ரீ விருது 113 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு பத்ம பூஷணும், 10 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம பூஷண் விருதுக்கு தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுக்கு தினமலர் டாக்டர் லட்சுமிபதி, மிருதங்கம் குருவாயூர் துரை, சமையல் கலைஞர் தாமு, அறிவியல் மற்றும் பொறியியல் பேராசிரியர் எம்.டி.ஸ்ரீனிவாஸ், கூத்து கலைஞர் புரிசை கே.சம்பந்தம், புதுச்சேரி தவில் இசை கலைஞர் தட்சினாமூர்த்தி, கிரிக்கெட் வீரர் அஸ்வின், தொழிலதிபர் க.சந்திரமோகன், சிற்பக்கலைஞர் ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, எழுத்தாளர் சீனி விஸ்வநாதன், பறை இசைக்கலைஞர் வேலு ஆசான், ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
