புதிய வரி விதிப்பு முறையில் ரூ. 12 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. இது முன்பு ரூ.7 லட்சமாக இருந்தது. வருமானம் ரூ. 12 லட்சம் வரை உள்ளவர்களுக்கு இந்த மாற்றம். புதிய வருமான வரி வரிவிதிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இந்த திருத்தப்பட்ட முறையின் கீழ், ஆண்டு வருமானம் ரூ.4 லட்சம் வரை உள்ள நபர்கள் எந்த வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை. ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரி விகிதம் பொருந்தும். வருமானம் ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இருந்தால் 10% வரி விகிதமும், ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை இருந்தால் 15% வரி விகிதமும், ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இருந்தால் 20% வரி விகிதமும் பொருந்தும். ரூ.20 லட்சம் மற்றும் அதற்கு மேல் ரூ.24 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நபர்கள் 25% வரி விகிதத்திற்கு உட்படுத்தப்படுவார்கள். ரூ.24 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் ஈட்டும் நபர்களுக்கு 30% என்ற அதிகபட்ச வரி விகிதம் பொருந்தும். மூத்த குடிமக்களுக்கு வட்டி வருமானத்தில் இருந்து வரி பிடித்தம் செய்யப்படும் வரம்பு ரூ.50,000-லிருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தப்படும். வாடகை வருவாயில் TDS வசூலிக்கப்படும் வரம்பு ரூ.2.40 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படும். பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 2 கோடி வரை டேர்ம் லோன். விவசாயிகளுக்கு ரூ.5 லட்சமாக அதிகரித்த கிசான் கிரெடிட் கார்டு. தனிநபர் வருமான வரிச் சட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை வருமானம் ஈட்டும் மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கு ரூ. 50,000-லிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அடிப்படை சுங்க வரியான BCD-யில் இருந்து கோபால்ட் பவுடர், லித்தியம்-அயன் பேட்டரி கழிவுகள் மற்றும் ஸ்கிராப் உள்ளிட்ட 12 முக்கியமான தாதுக்களுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் 8 வகை இறக்குமதி வரியே இருக்கும்: மத்திய அரசு 7 வகை இறக்குமதி வரியை நீக்கப்பட்டு உள்ளது. மூலதனச் செலவுக்காக ரூ.10.18 லட்சம் கோடி ஒதுக்கீடு. மாநிலங்களின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: இதற்காக 50 ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத கடன்கள் வழங்கப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். ஆன்லைன் தளங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஈ-சரம் போர்ட்டலில் பதிவு செய்து ஐடி கார்டுகள் வழங்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கு சுகாதார காப்பீடு வழங்கப்படும். 2047 ஆம் ஆண்டுக்குள் 10 கிகாவாட் அளவிற்கு அணுசக்தி உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கப்பல் கட்டுமானத்துக்கு ரூ.25,000 கோடி மதிப்பிலான கடல்சார் மேம்பாட்டு பண்ட் அமைக்கப்படும். இதில் 49% அரசு பங்களிப்பும், மீதமுள்ள தொகை துறைமுகங்கள் மற்றும் தனியார் துறையினரால் திரட்டப்படும். நகர்ப்புற உள்கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்காக மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி அளிக்கும். இதில் 50% நிதி கடன், கடன் மற்றும் பொது தனியார் கூட்டாண்மை மூலம் திரட்டப்படும். 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு ரூ.10,000 கோடி. வரும் ஆண்டில், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் மேலும் 10,000 இடங்கள் சேர்க்கப்படும், அடுத்த ஐந்தாண்டுகளில் மொத்தம் 75,000 இடங்கள் அதிகரிக்கும் வகையில் விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் நிதியத்திற்கு அரசு ஏற்கனவே ஒதுக்கியுள்ள ரூ. 10,000 கோடிக்கு கூடுதலாக மேலும் ரூ. 10,000 கோடி புதிய நிதியாக ஒதுக்கப்படுகிறது. காலணி மற்றும் தோல் துறைகளுக்கான “ஃபோகஸ் தயாரிப்பு திட்டம்” (Focus Product Scheme) மூலம் 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் ரூ. 4 லட்சம் கோடி வருவாய் மற்றும் ரூ. 1.1 லட்சம் கோடிக்கு மேல் ஏற்றுமதி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம். விவசாயிகளுக்கான கடன் வசதியை அதிகரிக்க Kisan Credit Card வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். மேலும், அஸ்ஸாமில் 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSMEs) க்கான கடன் உத்தரவாதக் கவரேஜ் ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும். 2025-26 நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4% முதல் 4.5% வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.16 லட்சம் கோடி பற்றாக்குறையை இருக்கும்.
