தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா,துவக்க விழாவை ஒருங்கிணைக்க 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் பிப்ரவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் உட்பட 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு, மாவட்ட செயலர்களை வரவழைத்து, கட்சி சார்பில் அனுமதி சீட்டுகள் நேற்று வழங்கப்பட்டன. துவக்க விழாவில் பங்கேற்கும் கட்சியினருக்கு, கியூ.ஆர்., ரகசிய குறியீடுடன் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
