சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை குறித்து சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
