காரைக்குடி மாநகராட்சியில் மழை நீா்க் கால்வாய்களை தூா்வாரும் பணி நேற்று தொடங்கியது. காரைக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் மேயா் சே. முத்துத்துரை தூா்வாரும் பணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினா்கள் சொ. கண்ணன், காா்த்திகேயன், கலா, தெய்வானை, நாச்சம்மை, பொறியாளா் செந்தில்குமாா், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்
