மருத்துவ படிப்பு
2020-21-ம் ஆண்டில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் 435 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். 2021-22-ல் 555 பேரும் 2022-23-ல் 584 பேரும் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். நடப்பு 2023-24-ம் ஆண்டில் 622 பேரும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளார்கள். 496 எம்பிபிஎஸ் படிப்பிலும் 126 பிடிஎஸ் படிப்பிலும் அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
எம்பிபிஎஸ் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு காரணமாக கூலித்தொழிலாளி, வீட்டு வேலை செய்பவர், ஏழை விவசாயி போன்ற சாமானியர்களின் பிள்ளைகள் 622 பேரின் டாக்டர் கனவு இந்த ஆண்டு நிறைவேறியுள்ளது.
இந்நிலையில் நமது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கமலை என்ற கிராமத்தில் ஒரே பள்ளியில் படித்து, இடஒதுக்கீடு மூலம் ஒரே மருத்துவக் கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவர்கள் ரவி மற்றும் நாகராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

