அரசியல் குறித்து படிக்க 3 மாதங்களுக்கு லண்டன் சென்றுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த இடைப்பட்ட காலத்துக்கான பாஜக பொறுப்புத் தலைவராக இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. இந்தநிலையில், கட்சி சார்ந்த பணிகளில் முடிவெடுக்க ஹெச்.ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என பாஜக தற்போது அறிவிப்பினை வெளியாகியிட்டுள்ளது.குழுவில், எச்.ராஜா ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த குழுவில் தமிழக பாஜக துணை தலைவர் சக்கரவர்த்தி, கனகசபாபதி, மாநில பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், பேராசிரியர் ராம சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
