பாரா ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார் இன்று (02.09.2024) தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் பிரிட்டன் வீரர் டேனியல் பெதெல்லை 21க்கு 14, 18க்கு 21, 23க்கு 21 செட் கணக்கில் வீழ்த்தி அபார சாதனை புரிந்துள்ளார். அதே சமயம் ஆடவர் வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளி வென்றார். இதன் மூலம் பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 2 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
