சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், சிலைகள் வைப்பதற்கான இடங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக போலீசார் இந்து அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் பல்ேவறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி போலீசார் சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படியும், மாசுகட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி இந்த ஆண்டு சென்னை பெருநகர காவல் எல்லையில் கடந்த ஆண்டு 1,519 சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கியது போல் இந்த ஆண்டும் அதே இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த இந்து அமைப்பாளர்களுக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் பிரதிஷ்டைக்காக வைக்கப்படும் சிலைகள் வரும் 11, 14, 15 ஆகிய 3 நாட்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் மூலம் மட்டுமே விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படு அனுமதிக்கப்பட்ட இடங்களில் கரைக்கப்பட வேண்டும்.
