தமிழகத்தில் முதல் முறையாக நாட்டு இன காளை மாடுகளுக்கான அழகுபோட்டி 14 நாட்டு இன காளை மாடுகள் பங்கேற்பு. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரம் செல்வ விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாட்டு இன காளை மாடுகளுக்கான அழகு போட்டி நடைபெற்றது இந்த அழகு போட்டியில் சிவகங்கை புதுக்கோட்டை ராமநாதபுரம் மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 14 நாட்டு இன காளை மாடுகள் பங்கேற்றன நாட்டுக்குட்டை, காங்கேயம், புலிக்குளம், தேனிமலைமாடு, புதுக்கோட்டை சிகப்பு, மட்டி போன்ற நாட்டின மாடுகள் கலந்து கொண்டன. கழுத்து, திமில், கொம்பு, தொடை, கால், சிலிர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் போட்டிகள் நடைப்பெற்றது காளைகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது இதில் வெற்றி பெற்ற முதல் மூன்று காளைகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது இந்த போட்டியினை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் திருவள்ளுவர் நற்பணி மன்றம் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
