இது குறித்து, தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமளா ராவ் நேற்று கூறியதாவது:நெய்யில் கலப்படத்தை பரிசோதிக்க எங்களிடம் ஆய்வகம் இல்லை. வெளியில் உள்ள ஆய்வகங்களிலும் நெய்யின் தரத்தை சரிபார்க்க எந்த அமைப்பும் இல்லை.நெய் கொள்முதல் செய்யும்போது ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட விலை மிகவும் ஆச்சரியம் அளித்தது. சுத்தமான பசு நெய்யை இவ்வளவு குறைந்த விலையில் கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. 1 கிலோ, 300 – 400 ரூபாய் வரை என குறிப்பிடப்பட்டிருந்தது.நெய் கொள்முதல் செய்யும்போது ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட விலை மிகவும் ஆச்சரியம் அளித்தது. சுத்தமான பசு நெய்யை இவ்வளவு குறைந்த விலையில் கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. 1 கிலோ, 300 – 400 ரூபாய் வரை என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, சப்ளை செய்யப்பட்ட நெய் ஆய்வக சோதனையில் தேர்ச்சி பெறவில்லை என்றால், கருப்புப் பட்டியலில் சேர்ப்போம் என, அனைத்து சப்ளையர்களையும் எச்சரித்தோம். அனைத்து மாதிரிகளையும் சேகரித்து, ஜூலை 6-ம் தேதி குஜராத்தின் ஆனந்த் நகரில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் உட்பட 10 ஆய்வகங்களுக்கு அனுப்பினோம்; ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி அளித்தன. ஆய்வில், நெய்யில் காய்கறி கொழுப்பு, விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.புகாருக்குள்ளான நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. இனி அபராதம் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் துவங்கும்.தேவஸ்தானத்துக்கு சொந்தமாக ஆய்வகம் அமைக்க நிபுணர் குழுவை கேட்டுக் கொண்டுள்ளோம். எனவே, எதிர் காலத்தில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படாது. திருப்பதி கோவில் பிரசாதத்தின் புனிதம் மீட்டெடுக்கப்படும்.
