லப்பர் பந்து விமர்சனம் அல்ல எல்லோரையும் பார்க்க தூண்டும் பதிவு. அடிச்ச எல்லா பாலுமே சிக்ஸர்தான் – உணர்வுகளை வைத்து ஒரு யதார்த்த கிரிக்கெட்! ஸ்போர்ட்ஸ் படம் என்றவுடன் வெறும் கிரிக்கெட் தொடர்பான காட்சிகளை மட்டுமே வைத்து ஒப்பேற்றாமல், ஈகோ பிரச்சினை, சாதி அரசியல், நெகிழ்ச்சியான தருணங்கள், கலகலப்பான நகைச்சுவை என ஒரு நிறைவான படைப்பாக வந்திருக்கிறது ‘லப்பர் பந்து’. தமிழின் முக்கியமான படங்களின் பட்டியலில் இப்படம் நிச்சயம் இடம் பிடிக்கும்.பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் அதை நேர்த்தியாகச் செய்து முடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.
