இன்று காலை11 மணியளவில் பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.இந்த சந்திப்பில், தமிழ்நாட்டுக்கு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் மற்றும் சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட பணிகளுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.
