கொல்கத்தா: நீலம் மற்றும் வெள்ளை நிறப்பெட்டிகள்பூட்டப்பட்ட மரப்பலகையால் ஆனஇருக்கைகள் கொண்ட அழகிய டிராம்வண்டிகள் கொல்கத்தா நகர வீதிகளில் கடந்த 151 ஆண்டுகளாக வலம் வந்தன. தற்போது பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறுவதால் கொல்கத்தா டிராம் போக்குவரத்து சேவையை நிறுத்தவிருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் கொல்கத்தா மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
