2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, பாராசிடமால், விட்டமின் டி, கால்சியம் சத்து மாத்திரைகள், உயர் ரத்த அழுத்த மாத்திரைகள், நீரிழிவு மாத்திரைகள், நிர்ணயிக்கப்பட்ட தர அளவில் இல்லை. மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், ஒவ்வொரு மாதமும் தன்னிச்சையாக மாத்திரைகளின் மாதிரிகளை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்புவார்கள். அதன்படி, ஆகஸ்ட் மாத ஆய்வு முடிவு இந்த தகவல்களை அளித்திருக்கிறது. விட்டமின் சி, டி3 மாத்திரைகள், ஷெல்கால், விட்டமின் பி காம்ப்ளெக்ஸ், விட்டமின் சி சாஃப்ட்ஜெல்ஸ், ஆன்டி-ஆசிட் பான்-டி, பாராசிட்டமால் மாத்திரைகள் (ஐபி500 எம்.ஜி.), நீரிழிவு மாத்திரையான கிளிமிபிரைடு, ரத்த அழுத்த மாத்திரையான டெல்மிசார்டன் போன்ற மக்கள் அதிகம் வாங்கும் மாத்திரைகளே இந்த தரக்கட்டுப்பாட்டுச் சோதனையில் தோல்வி அடைந்துவிட்டன. சத்து மாத்திரைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஷெல்கால் மாத்திரையும் தோல்வியடைந்திருக்கிறது.
