திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும்போது, முதல்-மந்திரி என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள், ஏன் இந்த விவகாரத்தைநேரடியாக ஊடகங்களிடம் ஏன் எடுத்துச் சென்றீர்கள்? எஸ்டிஐ குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு முன் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டிய அவசியம் என்ன? லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்? திருப்பதி லட்டு விவகாரத்தில் கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது. மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினார்.
