உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினி, 73, நேற்றிரவு சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இன்று அவருக்கு முக்கிய பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.பரிசோதனைக்கு பிறகு இன்றே வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
