இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உள்பட இஸ்ரேலின் அனஅனைத்து பகுதிகளையும் குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்த நிலையில், ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீண்டும் தாக்கப்பட்டால், இஸ்ரேல் முழுவதும் உள்ள உள்கட்டமைப்பைத் தாக்குவோம் என ஈரான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் முகமது பாகேரி கூறியுள்ளார். இன்னும்தீவிரமாக மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துவதுடன், இஸ்ரேல் அரசாங்கத்தின் அனைத்து உள்கட்டமைப்புகளும் குறிவைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
