தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறதுமாநாட்டுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மாநாட்டு பந்தல் கால்நடும் விழா நாளை நடைபெற இருக்கிறது. இதன்படி நாளை காலை 4 மணி முதல் 6 மணிக்குள் பந்தல் கால் நடப்படுகிறது. இதில் விஜய் பங்கேற்க இருக்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும், மாநாட்டுக்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி, மேடை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது.
